பெண்களை விளை நிலமாகச் சொல்லும் மரபு இலக்கியங்களில் உண்டு.
நிலத்தைப் போல அவளும் 'விதை' யைக் கருவில் சுமந்து பிரசவிப்பதால் இவ்விதம் கூறப்படுகிறது.
வானத்தை ஆண் என்றும் பூமியைப் பெண் என்றும் ரிக் வேதம் கூறுகிறது.
உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளைநிலங்கள் (2:223) எனக் குர்ஆன் கூறுகிறது.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும் (1039) என வள்ளுவர் கூறுகிறார்.
இங்கு உரை எழுதும் பரிமேலழகர் மனைவி ஊடல் கொண்டால் கணவன் 'போகம்' இழப்பான் என்கிறார்.
இதன்படி விளை நிலம்,போகம் எனும் சொற்களை பெண் தொடர்பில் அவர் கையாண்டார் என நினைக்கிறேன்.

நிலத்தின் விளைச்சலைக் கூட நம்மவர் இருபோகம், முப்போகம் என்பர்....
ஆங்கிலத்திலும் 'Husbandry' என்றால் 'வேளாண்மை' என்றொரு பொருள் உண்டு. ' Husbandman ' என்றால் 'உழவன்' என்றும் பொருள் உண்டு.
ஆக, கணவனும் Husband தான். இவ்வகையில் மனைவி விளைநிலம், கணவன் உழவன் என்பது சொல்லாமலேயே அமையும்.
(நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்)
கருத்துகள்
கருத்துரையிடுக