இலக்கியங்களின் வாயிலான
இஸ்லாமிய பண்பாட்டுத் தெளிவு - காலத்தின் தேவை
(சீறாப்புராணம்
மழையழைப்பித்த படலத்தினூடாக ஓர் முயற்சி)
(வீ. கமால் அஹமட்)
மானிட சமூகத்தின் பண்பாட்டினையூம்; அனுபவங்களையூம்
வெளிக்கொண்டு வந்து காட்சிப்படுத்துவதில்
இலக்கியங்களுக்கு முக்கிய பங்குள்ளது. இவை காலத்தினைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற
வகையில் மானிடரது இத்தகைய சமய, கலாச்சார பாரம்பரியங்களையூம் அவர்கள் கண்டு களித்த அனுபவங்களினையூம் தெளிவான
விம்பங்களாக வெளிக்காட்டுகின்றன. இவ்விம்பங்கள் மனித வாழ்வூக்குத் தேவையான
விழுமியக் கருத்துக்களை மக்கட் பண்போடு இணைத்து எடுத்துரைக்கும் போதேஇஅவை
சமூகத்தில் நிலையானதொரு அங்கீகாரத்தினைப்
பெற்றுக் கொள்கின்றன.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை அதனது போதனைகள் யாவும்
மனித வாழ்வின் ஈடேற்றத்திற்கு அவசியமான அம்சங்களாக உள்ளன. இத்தகைய அம்சங்களை இலக்கிய வரம்பில்
நின்று எடுத்தியம்பும் போது அது இஸ்லாமிய இலக்கியமாக உருவெடுக்கலாம். இவ்வகையில்இ
இஸ்லாத்தினைப் போதிப்பதற்கும் வளர்ப்பதற்குமான ஒரு ஆயுதமாக இலக்கியங்களைப்
பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதாகும். இப்பின்னணியில் நோக்கும் போது வரலாறு
நெடுகிலும் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு இலக்கியவதிகளினால் இத்தகைய
முயற்சிகள் இடம்பெற்றுள்ளமையினைக் காண முடிகிறது.
தமிழிலக்கியத்துறையைப் பொறுத்தவரை அங்கு
தமிழ்ப்பண்பாட்டினதும்; பாரம்பரியங்களினதும்
தாக்கம் அதிகம் உணரப்பட்ட ஒன்றாகும். தமிழ் மொழி தோன்றி வளர்ந்ததாகக் கூறப்படும்
சங்க காலம் தொடக்கம் தற்காலம் வரைக்கும் இது நீடித்து வருகிறது. இத்தகைய தமிழ்ப்
பண்பாட்டுத் தாக்கமானது இங்கு தோற்றம் பெற்ற இஸ்லாமிய இலக்கியங்களுக்குள்ளும் ஊடுருவியூள்ளமையூம்
மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வாறன ஊடுருவல்கள் இஸ்லாமிய சமய நெறிகளுக்கும்
கோட்பாடுகளுக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடும் என்ற அச்சத்தின் வெளிப்பாட்டினால்
நூலுருப்படுத்தப்பட்ட பல இலக்கியங்கள் மீள பதிப்பிக்கப்படாமலும்; எடுத்துரைக்கப்படாமலும் இருந்து
வருகின்றன.
மேற்கண்ட அச்சமானது நியாமான ஒன்றென
ஏற்கப்படினும் இதனால் அவ்விலக்கியங்கள் கூற எத்தனிக்கும் நல்ல பல கருத்துக்களையூம்
உபதேசங்களையூம் சேர்த்தே பலர் பயனற்றவை என ஓரங்கட்டுகின்றனர் ஆக இத்தகைய
ஓரங்கட்டல்களுக்கு அப்பால் எவ்விதம் ஒரு இலக்கியத்தினை நெறிமுறையாக அணுகிஇ அது
கூறவரும் சமூக விழுமியக் கருத்துக்களையூம் பண்பாட்டுப் பதிவூகளையூம் ஏனைய
சமூகத்தவருக்கு எடுத்துரைக்கலாம் என இங்கு ஆராயப்படுகிறது.
இஸ்லாமிய கோட்பாடுகள் மற்றும் பண்பாட்டு
நெறிகளை மையப்படுத்தி முறையற்ற பல விமர்சனங்களும் விசமக் கருத்துக்களும் கட்டவிழ்த்து
விடப்படும் தற்கால சூழலுக்கு முக்கியமானதொரு காரணியாக இஸ்லாமிய பண்பாடுகள் கலாச்சார
நெறிகள் முறையாக ஏனைய இன, மத பிரிவினர்களுக்கு தெளிவுறுத்தப்படாமையினைக்
குறிப்பிடலாம். இத்தகைய தௌpவூறுத்தல்களால் பல்லின
சமூகங்களைக் கொண்டு காணப்படும் இலங்கை உள்ளடங்கலான பல நாடுகளில் அச்சமூகத்தவர்
மத்தியில் சிறந்த நல்லிணக்கத்தினையும் புரிந்துணர்வினையும் ஏற்படுத்தப்படலாம்.
இதன்படி இலக்கியங்களை சமூக நல்லிணக்கத்திற்கும்
புரிந்துணர்வூக்குமான சாதனமாகப் பயன்படுத்த பயன்படுத்த எம்மவர் முன்வர வேண்டும்.
என்பதனையூம் துணைப் பொருளாக நான் இங்கு கூற விழைகிறேன். இதற்காக
இவ்வூள்ளடக்கத்தில் சீறாப்புராணம் எனும் இஸ்லாமிய இலக்கியத்தின் மழையழைப்பித்த
படலம் ஆய்வூக்குட்படுத்தப்படுகிறது.
சீராப்புராணம் இந்தியாவினை பிறப்பிடமாகக் கொண்ட
உமறுப்புலவரால்(1642) இயற்றப்பட்டதாகும். இது
காப்பியம் எனும் இலக்கிய வடிவத்தினைக் கையாண்டு நபி முஹம்மத்(ஸல்) அவர்களது
வாழ்க்கை வரலாற்றினையூம் அவரது அறிவூரைகளையூம் எடுத்துக் கூறுகிறது.
‘ சீறா ‘ என்பது ‘ சீறத் ( سيرة) ‘ என்ற அரபிச் சொல்லின்
திரிந்த வடிவமாகும். பயணம்( தழரசநெல) அல்லது சரிதை என்பதன் அதன் பொருள். இஸ்லாமிய
பரிபாசையில் நபியவர்களின் வாழ்க்கைச் சரிதையினை மட்டும் குறிப்பாகக் கூறவே இச்சொல்
கையாளப்படுகிறது.. இது தவிர ஏனைய (நபர்களது) சரிதையினைக் கூற ‘ தாரிஹ் (التاريخ) ‘ என்ற சொல்லே பெருவழக்கில்
பயன்படுத்தப்படுகிறது. ‘ புராணம் ‘ என்பது புராணா (पुराण) எனும் சமஸ்கிரத
(வடமொழி) சொல்லின் திரிந்த வடிவமாகும். வரலாறு அல்லது பழைமை என்பது அதன்
பொருளாகும். இச்சொல்லானது இந்துக்களது வேதங்களைச் சுட்டிக் கூறவே அதிகம்
பயன்படுத்தப்படுகிறது. எனவே இவ்விரு சொற்களும் இணைந்து முகம்மத் நபி (ஸல்)
அவர்களது வாழ்க்கைச் சரிதத்தைக் கூற உமறுப் புலவரால் கையாளப்பட்டுள்ளது.
உமறுப்புலவரினால் சீறாப்புராணம் என்ற பெயருடன்
தமிழக பண்பாட்டினை அவரது இலக்கியங்களுள் கையாளஇ சில சசூழலியல் காரணிகள்
காலாயமைந்தன. அவ்வகையில் உமறுப்புலவர் வாழ்ந்த அக்காலப்பகுதியில் இந்தியாவில்
ஆங்காங்கே இருந்த முஸ்லிம் மக்கள் தமக்கிருந்த இலக்கிய ஆர்வத்தின் காரணமாக கம்பராமாயணம்
மகாபாரதம் முதலிய இந்து மத இலக்கியங்களின் போதனைகளையூம் இதிகாசக் கதைகளையூம்
கேட்டு வருவதனைக் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக்கால கட்டத்தில் வாழ்ந்தவரான ‘ சீதக் காதி மரைக்காயர் ‘ எனும் நபர் முஸ்லிம்கள்
அவர்களது மார்க்க அடிப்படையில் அமைந்த இலக்கியங்களை படித்துப் பயன்பெற வேண்டும் என
விருப்பம் கொண்டிருந்தார். இதனாலேயே உமறுப்புலவரினை நபியவர்களது வாழ்க்கை
வரலாற்றினை அடியொற்றி ஒரு காப்பியத்தினைப் படைக்குமாறு வழிப்படுத்தியிருந்தார். ஆக
சீறாப்புராணம் இயற்றப்பட நோக்காய் இருந்த ஒரு விடயம் இஸ்லாமிய மார்க்க
உபன்னியாசங்களினை எடுத்தியம்ப வேண்டும் என்பதாகும்.
என்றாலும் உமறுப்புலவர் இங்கு கையாளும் சொற்கள்
எடுத்துக்காட்டும் உதாரணங்கள் என்பனவெல்லாம் அவர் இஸ்லாமிய பண்பாட்டினை ஏனைய
பண்பாடுகளுடன் கலப்புற செய்திருப்பதாக எண்ணத்தோன்றுகிறது. இதனாலேயே உமறுப்புலவர்
இஸ்லாமிய பண்பாட்டிற்கும் ஏனைய பண்பாடுகளுக்குமிடையே ஒரு தௌpவான கோட்டினை வரைவதில்
தோல்வி கண்டு விட்டார் எனப் பல தரப்பினரும் விமர்சனம் செய்கின்றனர். இவ்விதம் David
Shulman (1984) அவர்களின் விமர்சனம் குறிப்டத்தக்கவொன்றாகும். இத்தகைய
விமர்சனங்களும்; நியாப்பாடுகளும் எமது
ஆய்வூக்கு அவ்வளவூ அவசியமான விடயமாக நான் கருதவில்லை.
இவ்வாறான விமர்சங்களுக்கு மத்தியில்
சீறாப்பபுராணத்தின் உள்ளடக்க முறைமையினை நோக்குகின்ற போதுஇ உமறுப்புலவரினது
இலக்கியப் பாடுபொருளானது இஸ்லாமிய பாரம்பரியங்களினை ஏனைய சமூகத்தவருக்கு எடுத்துச்
சொல்வதனை நோக்காகக் கொண்டதாகத் தெரிகிறது.
சீறாப்புராணம் – மழையழைப்பித்த படலமானதுஇ குறித்தவொரு
காலகட்டத்தில் அரேபிய (மதீனா வாழ்) மக்கள் மழையின்றி பஞ்சத்தினாலும் கொடிய
வறுமையினாலும் அவதியூற்ற விதம் பற்றியூம்; அதிலிருந்து மீண்டெழும் வண்ணம் இறைவனின் உதவியினை நாடி
நின்ற விதம் பற்றியூம் கூறும் பகுதியாகும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது இறை
நம்பிக்கையூம் விசுவாசமும் பூரணமடைய சில அடிப்படையான விடயங்களினை உறுதியாக
நம்பியாக வேண்டும். இவற்றுள் முக்கியமான ஒன்றே ‘ இறை நிர்ணயம் ‘ – சகலதும் இறைவனின் விருப்பப்டியூம் ஆணைப்படியூமே
நடக்கின்றன (அரபியில் கழா-கத்ர் என்பர்) எனும் கோட்பாடாகும்.
நபி (ஸல்) அவர்களது பொன்மொழி (ஹதீஸ்)
பின்வருமாறு ஏற்பாடு செய்கிறது:
“ ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய
முடியாதுஇ
1. நாளை என்ன நடக்கும்
என்பதனை எவரும் அறிய முடியாது.
2. கருவறைகளிலுள்ள நிலமைகளை
எவரும் (தௌpவாக) அறிய முடியாது.
3. ஒருவர் நாளை எதைச்
சம்பாதிப்பார் என்பதனை அறிய முடியாது.
4. ஒருவர் தான் எந்த
இடத்தில் என்பதனை அறிய முடியாது.
5. மழை எப்போது
வருமென்பதனையூம் எவரும் அறிய முடியாது. “
(புஹாரி பக்கம் – 15 ஹதீஸ் எண்: 1039)
ஆகவே மழை எனும் அருள் இறைவனது நிர்ணயத்துடன்
இணைந்ததொரு விடயமென்பது முஸ்லீம்களது ஆழ்ந்த நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின்
வெளிப்பாடாகவே மழையின்றிக் கிடந்த அந்த அரேபிய மக்கள் தமது துன்பங்களைக் கூறி
சமூகத் தலைவரான முகம்மத் நபி (ஸல்) அவர்களை இறைவனிடம் மழை வேண்டிப்
பிராத்திக்குமாறு கூறுகின்றனர்.
இங்கு மக்கள் நபியவர்களுடன் இணைந்து இறைவனிடம்
பிராத்திக்க வேண்டும் எனக் கூறுவதானது மனிதராகிய நாம் இறைவனுக்கு முன்னால் தமது
சகல காரியங்களினையூம் அர்ப்பணம் செய்து எம்மை அடிமைகளாக காட்டிக் கொள்ள வேண்டும்
என்ற மேலான சிந்தனையினை எடுத்துக் காட்டுவதாகத் தெரிகிறது.
உமறுப்புலவர் இந்த படலத்தில் எடுத்துக் கூறும்
பாடு பொருள் அல்லது சம்பவமானது வெறுமெனே ஒரு கற்பனைச் சம்பவமோ அல்லது ஊகித்த
விடயமோ அல்ல. மாறாக இது இற்றை வரைக்கும் முஸ்லிம்களிடத்தில் நிலவி வரும் முக்கிய
வேண்டுதலாகும்.
இவ்விதம் முஸ்லிம்கள் மழை வேண்டித் தொழும் தொழுகையினை
‘சலாத்துல் இஸ்திஸ்கா - صلاة الإستسقاء என அரபியில்
கூறுவர்.
மழையழைப்பித்த படலத்தின் முதலாவது பாடற்
செய்தியாக முகம்மத் நபி (ஸல்) அவர்கள் பற்றிய பொதுவானதொரு அறிமுகத்தினையூம் அவரது
மாண்புகளையூம் புலவர் எடுத்துக் காட்டுகிறார். இவ்வகையில் கோபமற்ற ஹலீமா எனும்
வளர்ப்புத்தாயிடம் பால் குடித்து வளர்ந்த தனி முதற் தூதர்இ தலைவர் என்ற வருணிப்பு
இடம்பெறுகிறது. ஒரு சிறந்த தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்றே வீண் கோபம்
அல்லது மக்களைக் கடிந்து கொள்ளும் நிலையினை நீக்குததாகும் என உணர்ந்து இந்
வருணிப்பு கூறப்பட்டிருக்கலாம்.
அத்தோடு நபியவர்களை அவரது ஏனைய தோழர்கள் சூழ்ந்து
கொண்டிருக்கும் ஒரு செய்தியூம் வருகிறது. இவ்வகையில் அத்தோழர்களை கூற ‘அசுகாபிமார்‘ என்ற சொற்றொடர்
கையாளப்பட்டுள்ளது. இது ஸஹாபா என்ற அரபிச் சொல்லினை அடியொற்றி வந்ததாகும். இதன்
அர்த்தம் தோழர்கள் அல்லது நண்பர்கள் என்பதேயாகும்.
இவ்வாறு தோழர்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் போதே
நபியவர்களிடம் மழையின்மையால் மக்கள் படும் அவதியூம் துன்பமும் எடுத்துக்
கூறப்படுகிறது. அச்செய்தி ஆரம்ப கட்டமாக
“ கீர்த்தி சேர் வள்ளல் வெள்ளிக்கிழமையில் குத்துபாவில்
ஆர்த்து
எழுந்து
ஓதி மின்பர் அதனிடை இருக்கும் போதில்........
என்ற ஆரம்ப அடிகளோடு பாடல் வருகிறது. இங்கு
சம்பவம் இடம்பெற்றது ஓர் வெள்ளிக்கிழமை நாள் என்று தெளிவாக பாடல் கூறுகிறது.
வெள்ளிக்கிழமை நாளென்பது முஸ்லீம்கள் பள்ளிவாசலில் ஒன்று சேர்ந்து
நல்லுபதேசங்களைக் கேட்டுஇ தொழுகையில் ஈடுபடும் நாளாகும். இந்த நல்லுபதேச உரையினைக்
குறிக்கவே ‘குத்பா’ என்ற அரபிச் சொல்
பயன்படுத்தப்படும். இத்தகைய பிரசங்கத்தினை நிகழ்த்தும் தலைவர் (இமாம்)
வீற்றிருக்கும் இடமே ‘மிம்பர்’ என்று என்று
வழங்கப்படும். இது இப்பாடல்களில் ‘மின்பர்’ என திரிபடைந்து வந்துள்ளது. இத்தகையதொரு மேடையில் அல்லது
இடத்தில் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த சேர்ந்த
நபித்தோழர் மக்களது துன்ப நிலைகளை எடுத்துக் கூறுகிறார்.
இத்துன்ப நிலைகள் அடுத்துவரும் ஆறு (6) பாடல்களின் வாயிலாக
எடுத்துரைக்கப்படுகின்றன. இதே செய்தியினைக் கூறும் வகையிலேயே புஹாரி எனும் ஹதீஸ்
நூலில் நபி மொழி ஒன்று இடம்பெறுகிறது:
“ நபித்தோழர்களில் ஒருவரான் அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்இ
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. நபியவர்கள் ஒரு
வெள்ளிக்கிழமையன்று மிம்பரில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதுஇ ஒரு கிராமவாசி
எழுந்தார். நபியவர்களே! செல்வங்கள் அழிந்து விட்டன. குடும்பத்தார் பட்டினியில்
வாடுகின்றனர். எங்களுக்கு மழை பொழியச் செய்யூமாறு அல்லாஹ்விடம் பிராத்தியூங்கள்
என்று அவர் கூறினார். பின்பு நபியவர்கள் தன் இரு கைகளையூம் ஏந்தி பிராத்தனை
செய்தார்கள்.......”
(ஸஹீஷுஹல் புகாரி பாகம் 1 அத்தியாயம் 15 ஹதீஸ் இல:1021)
என்று அச்செய்தி தெளிவாக ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. எனவே உமறுப்புலவர் இம்மழையழைப்பித்த படலத்தில் மேற்கண்ட
ஹதீஸினை உள்வாங்கியே தனது பாடல்களை நகர்த்திச் செல்கிறார்.
இவ்வாறான செய்தியை புலவர் மிக விரிவாக எடுத்து
நோக்கியதாகத் தெரிகிறது. அவ்வகையில்
“ மாரி நீர் வறந்து சோலை மரம் இலை உதிர்ந்து மிக்க
பாரினில் எழுந்த பைங்கூழ் பசை அறக்கருகி....”
என வரும் பாடல்களில் அந்த விபரிப்பினைக் காண
முடிகிறது.
எங்கும் நீரானது வற்றப்பெற்று சோலைகளிலுள்ள
மரங்கள் யாவூம் கருகின. பூமியில் இருந்த பச்சிளம் பயிர்கள் எல்லாம் அழிவடைந்துஇ
கானல் நீர் எங்கும் தோன்றும்படியாக வறட்சியே பெருகியது எனக் கூறுவதோடுஇ
இவ்வறட்சியினால் சிறியவர் பெரியவர் என அனைவரும் பசியினால் வாட்டமடைந்து
பொலிவிழந்து காணப்பட்டதாகவூம் கூறப்படுகிறது. மேற்கண்ட ஹதீஸின் நிழலில் பார்க்கும்
போது உமறுப்புலவர் அச்செய்தியினை உள்வாங்கி தனது விரிந்த சொல்லாட்சியினால் அதனை
சற்று விபரித்திருப்பதனைக் காணமுடிகிறது.
அது போலவேஇ வறட்சியினால் மக்களைச் சூழ்ந்து
கொண்ட துன்பத்தினால் அவர்களது இயல்பான நல்லொழுக்கம் நற்பண்புகள் தொலைக்கப்பட்ட
செய்தியையூம் புலவர் எடுத்துக் காட்டுகிறார். அதீத வறட்சியினால் தமது பசியினைப்
போக்க எண்ணிய மக்கள் இழி செயல்களான களவு முதலியவற்றை செய்ய தலைப்படல், வரும்
விருந்தாளிகளை கவனிக்க வழியின்றி வெட்கமடைந்து கதவினைப் பூட்டி வீட்டினுள் அடைபட்டுக்
கிடத்தல் முதலிய நிலைக்கு தள்ளப்பட்டமையினையூம் புலவர் கூறுகிறார்.
இத்தகைய எடுத்துரைப்புக்களின் உட்பொருள் யாதெனில்
மேற்கண்ட இழி செயல்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்பதேயாகும். நன்மை – தீமைஇ வறுமை - செல்வச் செழிப்பு என்பனவெல்லாம் இறைவன்
புறத்திலிருந்து வரும் சோதனைகள் என்ற நிலையூடனேயே மானிட சமூகம் தம்மை நிலை
நிறுத்திக் கொண்டு பாவ காரியங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்
எனும் உபதேசத்தினையே இப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன.
இப்பாடல்களுள் மனிதர்கள் அடைந்த துன்பத்தோடு
இணைத்து ஏனைய ஜீவராசிகள் கால்நடைகள் என்பனவூம் அனுபவித்த துன்பங்களை புலவர் தௌpவாக காட்சிப்
படுத்துகிறார். இதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவாகவே மழைக்கான பிராத்தனை
இடம்பெற வேண்டும் என்பதன் தேவையூம் இங்கு உணர்த்தப்படுகிறது.
முஸ்லீம்கள் மழை வேண்டித் தொழுகையில் ஈடுபடும்
போது தொழுகை நடத்தும் நபர் அல்லது சமூகத்தலைவரின் தலைமையில் திறந்த வெளி ஒன்றில்
ஒன்று கூடுவர். அத்தோடு அந்த வெளியில்
தமது கால் நடைகளையூம் கொண்டு வந்து வைத்த பின்பே தொழுகையிலும் அதனோடு இணைந்த
பிராத்தனையிலும் ஈடுபடுவர். இந்நடைமுறையானது ஆரம்ப கால அரேபிய முஸ்லிம்கள் தொட்டு
இற்றை வரைக்கும் இருந்து வருகிறது. இதன் முக்கிய தாற்பரியம் யாதெனில் மழை எனும்
அருளானது மனித சமூகத்தினை மட்டுமின்றி முழு உயிரங்களினையூம் போசிக்கும்படியானது
என்பதேயாகும்.
இவ்வாறான எண்ணிறைந்த துன்பங்களை எடுத்துக்
காட்டியே மழை வேண்டிப் பிராத்திக்க வேண்டும் என்பதன் அவசிய நிலை எடுத்துக்
காட்டப்படுகிறது. இவற்றை செவியூற்ற நபியவர்கள் பிராத்தனை செய்யூம் சம்பவம்
கீழ்வரும் பாடலில் இடம்பெறுகிறது:
“ திருத்தமாய் உரைப்ப கேட்டு திருநபி இரங்கி பாரில்
வருத்தங்கள்
நீக்க
வேண்டி மனத்தினில் கிருபை மீறி பொருந்து அரும் புறுக்கான்
வேதப்
பொருளினை எவரும் உள்ளத்து இருத்து அரும் ஒளியை
உன்னி
இரு கை ஏந்தி துஆ இரந்து.”
இங்கு புலவர் கையாண்ட ‘புறுக்கான்’ என்ற சொல் முஸ்லிம்களால்
வேத நூலான குர்ஆனுக்கு வழங்கும் இன்னொரு பெயராகும். ‘துஆ’ எனும் சொல் அரபியில்
இறைவனிடம் செய்யப்படும் பிராத்தனையினை குறிப்பிடப் பயன்படும். இவ்விதம் குர்ஆனினை
முன்னிலைப்படுத்தி இரக்க சிந்தனை பெருகிஇ நபியவர்கள் பிராத்தனை செய்த விதமும்
பின்னர் அதனால் மழை பொழிந் விதமும் தொடர்ந்து புலவரால் எடுத்துக் காட்டப்படுகிறது.
நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸில் இதே செய்தி
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
“....நபி (ஸல்) அவர்கள் தங்களின் கைகளினை உயர்த்தினார். இறைவா !
மழையைப் பொழியச் செய்வாயாக ! என்று இரு முறை கூறிப் பிராத்தனை செய்தார்கள்.
அல்லாஹ்வின் மீது ஆணையாகஇ அப்போது வனத்தில் (அதுவரை) எந்த மேகத்தையூம் நாங்கள்
காணவில்லை. திடீரென மேகம் தோன்றி மழை பொழிந்தது. பின்னர்கள் நபியவர்கள்
மிம்பரிலிருந்து தொழுகை நடாத்தினார்கள்இ மழை அடுத்த (வெள்ளிக் கிழமை) ஜும்மா வரை
நீடித்தது..” (ஸஹீஹுல் புஹாரி பாகம் 1 அத்தியாயம் 15, ஹதீஸ் இல:1021)
இந்த ஹதீஸின் பிரதிபலிப்பினைத் தொடர்ந்து வரும்
பாடல்களில் காணமுடிகிறது. ஹதீஸின் படி நோக்கும் போது மழையானது அடுத்த ஜும்மா நாளான
வெள்ளிக்கிழமை வரைக்கும் நீடித்தது என்ற அர்த்தம் கிட்டுகிறது. அதாவது 7 நாட்கள் என்று
நேரடியாகப் பொருள் கொள்ளலாம். உமறுப்புலவர் இம்மழை நாட்களைக் கூறும் போதுஇ ‘ ஆறிரு நாண் மழை’ என ஏற்பாடு செய்கிறார்.
இது ‘ஆறு இரு நாள் மழை’ என பிரிக்கப்படும். இதன்
நேரடிப் பொருளாவது (6×2=12) பன்னிரண்டு நாட்களென
அமையூம்.
என்றாலும் ‘ஆறு இரு நாள் மழை’ என்பதில் வரும் “இரு”
என்பதற்கு ‘பெரிய’ என்ற இன்னொரு பொருளும்
கொள்ளலாம் (வெற்றித்தமிழ் அகராதி பக்கம் – 52இ ச. மெய்யப்பன்
மணிவாசகர் பதிப்பகம்). ஆக ஆறு பெரிய நாட்கள் என அமையூம். ஆறு பெரிய - முழுமையான
நாட்கள் என்பதே அதன் பொருளாகும். இதன்படி அடுத்த நாள் முழுமையடையாத நாளாக இருக்க
வேண்டும் (முற்பகல் பொழுது மட்டும் - அதுவே ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை). இதன்படி
மொத்தமாக ஏழு நாட்கள் மழை பொழிந்தது எனவூம் பொருள் கொள்ளலாம். இத்தகைய பொருட்
பேதங்கள் செய்யூள்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். என்றாலும் குறித்த நபி
மொழியில் ஏற்பாடு செய்யப்பட அறிவிப்பில் எத்தகைய குழப்பமும் கிடையாது.
இந்த அதீத மழையினால் மேலும் இன்னொரு வகைத்
துன்பம் பீடித்தமையினை மேற்கண்ட நபி மொழியின் அடுத்த பகுதி கீழ்வருமாறு கூறுகிறது:
“..... மழை அடுத்த ஜும்மா (வெள்ளிகிழமை) நாள் வரை
நீடித்தது. நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போதுஇ அதே கிராமவாசி அல்லது வேறொருவர்
எழுந்துஇ நபியவர்களே ! கட்டிடங்கள் இடிந்து விட்டனஇ செல்வங்கள் மூழ்கி விட்டன.
எங்களுக்காக அல்லாஹ்விடம் பிராத்தியூங்கள் என்றார்....”
இங்கு முன்னர் மழையின்றி மக்கள் அனுபவித்த
துன்பத்தைப் போலஇ கிடைத்த அதீத மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால்
செல்வங்ளோடு உயிர்கள் காவப்பட்டமை முதலிய துன்பங்கள் இன்னும் இன்னும் விரிவாக
உமறுப்புலவரினால் கூறப்படுகின்றன.
இதே தொடரில் மேற்கண்ட நபிமொழி முடிவடையூம்
போதுஇ இறைவனிடம் நபியவர்கள் மழையினை நிறுத்துமாறும் அந்த மழையினை பிரயோசனமான
ஒன்றாக ஆக்கித்தருமாரும் பிராத்தனை செய்கிறார்கள்.
இச்செய்தி கீழ்வருமாறு நபிமொழியின் வாயிலாக
அறிவிக்கப்படுகிறது:
“..... நபி (ஸல்) அவர்கள் தங்களின் கைகளை
உயர்த்தினார்கள். இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு (இம்மழையைத்
திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக் இதனை ஆக்கி விடாதே என்று கூறினார்கள்.
அவர்கள் வானத்தினை நோக்கித் தம் கையால் சைகை செய்த போதெல்லாம் மேகங்கள் விலகிச்
சென்றன. முடிவில் மதீனா நகரம் ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதனைப் போல
மாறியது....”
அத்தோடு இதேவாறன ஹதீஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
புஹாரியின் இன்னொரு அறிவிப்பில்,
‘.....கனாத்’ எனும் நீரோடை ஒரு மாதம் ஓடியது. எப்பகுதியிலிருந்தும் வரக்
கூடியவர்கள் இம்மழையைப்பற்றி பேசாமலில்லை. “ என்ற செய்தியூம் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
(ஸஹீஷுஹல் புகாரி பாகம் 1 அத்தியாயம் 15 ஹதீஸ் எண்: 1033)
இதே விதமாகவே சில விசேடமான வருணிப்புக்களையூம்
உதாரணங்களையூம் கையாண்டு உமறுப்புலவர் மழையழைப்பித்த படலத்தினை நிறைவூ செய்கிறார்.
அவ்விதம்,
“ நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த
நபி
துவா செய்திட முகிலும்
தென்வரை முதலாம் வரைகளில் புகுந்த
தினகரன் விசும்பிடை செறிந்தான்.....”
என்று நிறைவூ செய்யூம் போது நபியவர்களது துஆ
பிராத்தனையினை மீளவூம் பொருந்திக் கொண்ட இறைவன் மழையினை நிறுத்தி இன்னொரு வகையிலான
அருளிச் செய்தான் எனக் கூறுகிறார்.
மேற்கண்ட கலந்துரையாடலின் வாயிலாக
சீறாப்புராணத்தின் பாடு பொருளில் பரவலாக இஸ்லாமிய நெறிமுறைகளினை மையப்படுத்தி சில
அரிய வகையிலான சமூக விழுமியக் கருத்துக்களையூம்; நற்செய்திகளையூம் கூற உமறுப்புலவரினால்
முடிந்துள்ளது. எனும் விடயம் என்னால் துணியப்பட்டது.
எனவேதான் இந்த அணுகுமுறையினை இலக்கியவாதி
வாசகன் உள்ளடங்கலாக விமர்சகர்களும் மனதிற் கொண்டு முறையே இலக்கியங்களைப் படைக்கவோ படிக்கவோ
விமர்சனம் செய்யவோ முன்வர வேண்டும். இதனால் இஸ்லாமிய இலக்கியங்களுக்குள்
காணப்படும் தெளிவின்மைகள் நீக்கப்பட்டு, தெளிவான உபதேசங்கள் பிற சமூகத்தவரிடையே
கொண்டு சேர்க்கப்பட ஏதுவான சூழல்
உருவாகலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக