ஆணுக்கும் கற்புண்டு !
**********************
**********************
பொதுவாக கற்பொழுக்கம் பெண்களின் பாலியல் ஒழுக்கமாக கருதப்படுகிறது. ஆயினும் பாரதி,
" கற்பு நிலையென்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் "
எனப் பாடுகிறார்.
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் "
எனப் பாடுகிறார்.
அத்துடன் பல சான்றோறும் ஊங்கணோரும் அது ஆண் மகனுக்கும் உரியதே என்கின்றனர்.
இறைவன் தனது அருள் மறையில், இறை விசுவாசிகளான ஆண்களும் பெண்களும் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுகிறான்.
தொல்காப்பியர்,
" கற்பெனப் படுவது கரணமொடு புணர
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே" - என்கிறார்.
அதாவது கற்பு என்றால் கொள்வதற்குரிய ஆண்மகனுக்கு ஒரு பெண்ணை உரியோர் திருமணம் செய்து வைப்பதாகும்.

இதன்படி திருமணம் மூலமாகவேயன்றி கற்புநிலை பாதுகாக்கப்படாது என்று பொருள் கொள்ளலாம்.
திருவள்ளுவர் ஆணுக்கும் கற்பினைப் போதிக்கிறார்.
ஆண்களை நோக்கி,
"வரைவின் மகளிர் - பரத்தையர்களிடம் செல்லாதே" மற்றும்
"பிறனில் விளையாமை - பிறர் மனை(வி) நோக்காதே" எனக் கூறுகிறார்........
ஆண்களை நோக்கி,
"வரைவின் மகளிர் - பரத்தையர்களிடம் செல்லாதே" மற்றும்
"பிறனில் விளையாமை - பிறர் மனை(வி) நோக்காதே" எனக் கூறுகிறார்........
இவ்விதம் ஆணும் கற்புடையான்.....
19.02.2017
(நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான், எம்மொழி செம்மொழி, 2010)
(நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான், எம்மொழி செம்மொழி, 2010)
கருத்துகள்
கருத்துரையிடுக