திரு மற்றும் அண்ணல் முதலான சொற்களின் மீதான கவனம்
**************************************
தமிழில், 'திரு' என்ற சொல் பல அர்த்தங்களைத் தாங்கி நிற்கின்றது.
பெரு வழக்கில் இச்சொல் 'அழகு' எனும் பொருளினைத் தரும். திருமணம் (அழகிய மணம்/உறவு), திருமகள், திருநங்கை, திருவாளர், திருப்பதி(அழகிய ஊர்/நகரம்... போன்ற சொற்களே இதனை எடுத்துக் காட்டவல்லன.
இத்தகைய அர்த்தத்திலேயே 'திருநபி' என்ற சொல்லைக் கையாள்கிறோம். அழகிய நபி என்று பொருள்.
இவ்விதம் 'திரு' எனும் சொல்லை 'நபி' எனும் சொல்லுடன் இணைத்து முதலில் கையாண்ட பெருமை உமறுப்புலவரையே சாரும். அவர் தமிழ் மற்றும் அறபிய மொழிகளை உறவுப்படுத்தும் நோக்கிலேயே இவ்விதம் கையாண்டிருக்கிறார்.

'அண்ணல்' எனும் சொல்லுக்கு 'தலைமை, பெரிய' எனும் அர்த்தங்கள் கிட்டுகின்றன.
"...நனை கவுள்
அண்ணல் யானை (தலைமையையுடைய யானை).." (குறுந்தொகை - 343)

"....அண்ணல் காணாவூங்கே.." - தலைவனைக் காணும் முன்பு (புறநானூறு)
மேற்கண்ட பாடல்களில் தலைமை, தலைவன் என்றே அண்ணல் என்ற சொல் அர்த்தப்படுறது.
இதனாலேயே நாமும் அண்ணல் நபி என்று நபிகளாரை கண்ணியமாகவும், உயர்வாகவும் அழைக்கிறோம்....

இவ்விதம் பொருள் உணர்ந்து பிரயோகிப்பது சிறந்தது.
13.05.2017
கருத்துகள்
கருத்துரையிடுக