மனிதர் எனும் சொற்பிறப்பாக்கம்
***********************************
***********************************
' மன் ' என்பதற்குத் தமிழில் ' நிலைத்த ' என்பது பொருளாகும். வடமொழியும் இதே பொருளில் ' மனுஷ் ' என்று மனித இனத்தை குறிக்கப் பயன்படுகிறது.
இதுவே பின்னர் பூமியை ஆளப் பிறந்தவன் என்று சொல்லக் காரணமாய் இருந்துள்ளது.
திருமறைக் குர்ஆனில் இறைவன் இவ்வுலகை ஆள, தன் பிரதிநிதியான மனிதனைப் படைத்தான் என்கிறான்.
இதற்காக குறித்தவொரு காலம் வரைக்கும் அவனுக்கு ஆட்சியைக் கொடுத்து இப்பூமியை வளப்படுத்தும் (இமாறதுல் அர்ழ்) பணியையும் கொடுத்தான் என இஸ்லாம் கூறுகிறது.
இன்னொரு புறம், இன்ஸான், நாஸ் முதலான சொற்களின் அறபிய அடிச் சொல் 'மறந்தான்' என அர்த்தப்படுவதாக அறியக் கிடைத்தது.
மேற்சொன்ன இறை பணியை மறந்து அலட்சியமாய் வாழும் வர்க்கத்தவரான மனிதர்களை அது குறிக்கலாம்.

'மன்' என்பதிலிருந்தே 'மன்னன்' என்னும் சொல்லும் தோன்றியிருக்கும் என்பது துணிபு. நிலைத்து நின்று வழுவாது ஆள்பவன் மன்னன்/மன்னர் என கையாளப்பட்டதாக அறிகிறேன். மனிதர்களுக்குள் வலிமை, செல்வம், அதிகார பலம் போன்றவற்றைப் பெற்று ஒரு வகுப்பாரை ஆட்சி செய்பவன் இவ்விதம் அழைக்கப்பட்டு வந்துள்ளான்.
ஆங்கிலத்திலும் இவ்வாறே 'மன்'என்பது 'மேன்' - Man என்று ஆகியிருக்கலாம். ஆக, உலக மொழிகளில் பலவற்றில் இந்த உட்கூற்றுடனே மனிதனைக் குறித்த சொற்கள் தோற்றம் பெற்றன.
அல்லாஹ் நன்கறிந்தவன்.
வேறு ஏதேனும் துணிபுகள், தகவல்கள் இருப்பின் வரவேற்கிறன்.
19.05.2017
கருத்துகள்
கருத்துரையிடுக