விவாதமும் அரங்கும் !!!
விவாதம் என்பது காரண காரியத் தொடர்புகளோடு தம் பக்க நியாயங்களையும் நிறுவல்களையும் தருக்க ரீதியாக' உள்ளபடியாக எடுத்துரைக்கும் ஊடகமாகும்.
பொதுவாக விவாதங்களுக்கென சில நெறிமுறைகள் உண்டு....
தன் பக்க நியாயங்களையும் தருக்கங்களையும் எடுத்துரைக்கும் போது, தான் சார்ந்திருக்கும் பக்கத்தினை பலப்படுத்தும் முயற்சியில் நிறுவப்படாத ஊகங்களையும், ஊர்ஜிதமற்ற செய்திகளையும் எடுத்துரைப்பது இன்று சர்வ சாதரணமாகி விட்டது...
இதே அணுகுமுறையினையே மார்க்க விடயதானங்கள் மீது எம்மில் பலர் பின்பற்றுகின்றனர்..(?) இது பெரும் வேதனையினையே அளிக்கின்றது.
இத்தகையதொரு அணுகுமுறையினை வடிவமைத்து தந்தது மார்க்கமல்ல... அதற்கு மார்க்கச் சாயம் பூசுவது நல்லதுமல்ல.
" நீங்கள் அழகிய முறையில் விவாதித்துக் கொள்ளுங்கள்..." என்ற வசனத்தினை முன்னிலைப்படுத்தும் நாம் ,
" உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான பொதுவான விடயங்களின் பக்கம் வாருங்கள்.... " என்ற வசனத்தினையும், முன்மாதிரியினையும் மறந்து விட்டோம்...
" உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான பொதுவான விடயங்களின் பக்கம் வாருங்கள்.... " என்ற வசனத்தினையும், முன்மாதிரியினையும் மறந்து விட்டோம்...
அழகிய முறையில் விவாதிப்பதென்பதன் அர்த்தம் தான் என்ன??
அப்படியொரு அழகிய முறை எம்மவர் விவாதங்களில் என்றாவது கடைப்பிடிக்கப்பட்டதுண்டா...??
அப்படியொரு அழகிய முறை எம்மவர் விவாதங்களில் என்றாவது கடைப்பிடிக்கப்பட்டதுண்டா...??
அழகிய முறை தான் என்ன? அதன் இலக்கண இலச்சியங்கள் தான் என்ன..???...என்று பார்ப்பதும் ஆராய்வதும் பயன் தரும். ஆக, அவை நோக்கி நகருவோம்..
கருத்துகள்
கருத்துரையிடுக