முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறும்பதிவு - 1

செம மச்சி... செம..
***************
எம்மில் பலர் வார்த்தைக்கு வார்த்தை செம மச்சி, செமயா இருக்குடா, செம படம்டா, செம அழகுடா... என்றெல்லாம் கூறுவோம்.
' செம ' என்பது எங்கிருந்து வந்தது, அதன் அர்த்தம் தான் என்ன ??
சொற்பிறப்பியல் இலக்கணப்படி ' செம ' என்பது, ' செம்மை ' என்ற சொல்லின் மருவிய வடிவமாகும். இது
அழகு, நேர்த்தி, எனப் பல பொருள்படும்.
செம்மையான படம், செம்மையான அழகு என்றே விரிவான விளக்கங்களை மேற்கண்ட சொற்கள் தாங்கி இருக்கின்றன.
கருத்தாளம் மிக்க மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம்.
04.10.2017

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க காலத்து அகவாழ்வும்; இல்லற மாண்பும்

சங்க காலத்து அக வாழ்வும், இல்லற மாண்பும் (தேர்நிலைச் செய்யுள்களினூடான நோக்கு). ஆண் – பெண்களிடையேயான இடைத்தொடர்புகளையும் ; ஒழுக்கங்களையும் காதலன் – காதலி, தலைவன் – தலைவி அல்லது கணவன் – மனைவி எனப் பல கோணங்களில் சங்ககால அகத்திணைச் செய்யுள்கள் எடுத்துக் காட்டுகின்றன. கதை மாந்தர்களது மோதல் காதல், மீளல்  உணர்ச்சிகளையும் ; குடும்ப வாழ்வியலையும் சொல்லோவியங்களாகக் காட்டுவதில் இவ்வகத்திணைப் பாடல்களுக்கு முக்கிய பங்குண்டு. இக்காலத்தில் இல்லற வாழ்வும் கற்பொழுக்கமும் நெறிமுறைகளுக்குட்பட்டும், அதற்கப்பாற்பட்டும் காணப்டுகின்றன. ஒரு முறையான திருமண வாழ்வுக்கு முன்னர் களவொழுக்கத்திற்கு முக்கியத்துவங்கொடுத்த பல பாடல்களையும் காண முடிகின்றது. இதனாலேயே சங்ககாலத்தில் நிலவிய மண முறைகளை பிரதானமாக களவு மணம், கற்பு மணம் சான்றோர் பலர் பகுத்தளித்துள்ளனர். களவொழுக்கமும் அதன் வகைப்பட்ட உறவினையும் பிற்கால மக்கள் வெறுத்ததன் விளைவாகவே சங்கமருவிய காலத்தில் (உலகியலும் அதன் ஈடுபாடும் பழிக்கப்பட்டு) அறவொழுக்கம் போற்றப்படலாயிற்று.             களவு மணம் எ...

சீறாப்புராணம் மழையழைப்பித்த படலம் காட்டும் பண்பாடு

இலக்கியங்களின் வாயிலான இஸ்லாமிய பண்பாட்டுத் தெளிவு - காலத்தின் தேவை ( சீறாப்புராணம் மழையழைப்பித்த படலத்தினூடாக ஓர் முயற்சி) (வீ. கமால் அஹமட்) மானிட சமூகத்தின் பண்பாட்டினையூம் ; அனுபவங்களையூம் வெளிக்கொண்டு வந்து  காட்சிப்படுத்துவதில் இலக்கியங்களுக்கு முக்கிய பங்குள்ளது. இவை காலத்தினைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற வகையில் மானிடரது இத்தகைய சமய, கலாச்சார பாரம்பரியங்களையூம்  அவர்கள் கண்டு களித்த அனுபவங்களினையூம் தெளிவான விம்பங்களாக வெளிக்காட்டுகின்றன. இவ்விம்பங்கள் மனித வாழ்வூக்குத் தேவையான விழுமியக் கருத்துக்களை மக்கட் பண்போடு இணைத்து எடுத்துரைக்கும் போதேஇஅவை சமூகத்தில்  நிலையானதொரு அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்கின்றன. இஸ்லாத்தைப் பொறுத்தவரை அதனது போதனைகள் யாவும் மனித வாழ்வின் ஈடேற்றத்திற்கு அவசியமான அம்சங்களாக  உள்ளன. இத்தகைய அம்சங்களை இலக்கிய வரம்பில் நின்று எடுத்தியம்பும் போது அது இஸ்லாமிய இலக்கியமாக உருவெடுக்கலாம். இவ்வகையில்இ இஸ்லாத்தினைப் போதிப்பதற்கும் வளர்ப்பதற்குமான ஒரு ஆயுதமாக இலக்கியங்களைப் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதாகும். இப்பின்னணியில் நோக்கு...

குறும்பதிவு - 7

' பக்கி ' எனும் சொல் மீதான அவதானம் .. ***************************** 'பக்கி' எனும் சொல் பேச்சு வழக்கில் ஒரு நபரை தூற்ற, அவரது செயலை பழிக்க பலரால் (அறிந்தோ, அறியாலோ) பயன்படுத்தப்படுகிறது. பலர் (அதிகமாக ஆண்கள்) நண்பர்களை கோபத்துடன் ' போடாப் பக்கி ' , ' ஏன் பக்கி.... ' என்று கூறுவர். ' பக்கி ' என்ற சொல்லுக்கு (பறவை, குதிரை வண்டி.. எனப்) பல பொருள் உண்டெனினும் ' ஒன்றும் ஈயாதவன் - உதவி புரியாதவன் ' எனும் ஆள் சார்ந்த சுட்டுப் பொருளும் உண்டு...... உண்மையில் நாம் எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கிறோம்...... 🤔 ஆக, இனி 'பக்கி' என்று ஏச விரும்வோர் நிதானித்து, ஆழமாக யோசித்து ஏசவும். மறுபுறம் அடிக்கடி இந்த சொல்லைக் கையாள்வோர் இனி பொருள் உணர்ந்ததால் மகிழ்ச்சி கொள்ளவும்.  😀 03.11.2016